மஞ்சு வாரியர், நஸ்ரியா, சாய் பல்லவி, ரேவதி, நயன்தாராவா இது.. செம்ம க்யூட்.. வீடியோ வைரல்..!

மஞ்சு வாரியர், நஸ்ரியா, சாய் பல்லவி, ரேவதி, நயன்தாராவா இது.. செம்ம க்யூட்.. வீடியோ வைரல்..!
இன்று தென் இந்திய சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவையே கலக்கும் நட்சத்திரங்கள் இவர்கள். ஆனால் இவர்கள் அனைவருக்குமே ஒரு ஒற்றுமை உண்டு.
பொறுமையாக காலேஜ் படித்துவிட்டு, பேஷன் இண்டஸ்ட்ரிக்குள் நுழைந்து, சப்போர்டிங் ரோல் செய்து கதாநாயகிகளாக உருவாக வில்லை. சிறுவயதிலேயே இவர்களின் இன்றைய உச்சம் ஆண்ட்ரே எழுதப்பட்டிருக்கிறது.
மஞ்சு வாரியர்:
நாம் இந்த காணொளியில் பார்க்கவுள்ளது மஞ்சு வாரியர் தற்போது அசுரன் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்பு தமிழில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் நடிப்பினால் கட்டி ஈர்த்தவர். மலையாள சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார்.
நஸ்ரியா:
தமிழில் நடித்த படங்கள் கம்மி என்றாலும் தோட்ட புகழ் உச்சம். இவரின் அந்த க்யூட்டான reactionக்கு மயங்காத ரசிகர்களே இல்லை. பகாத் பாசிலை திருமணம் செய்ததற்கு பின் பெரிதாக சினிமாவில் நடிக்கவில்லை, ஆனால் ட்ரான்ஸ் படம் மூலம் re-என்ட்ரி கொடுத்து ஒரு கலக்கு கலக்கினார்.
சாய் பல்லவி:
இப்போது இவர் தமிழை விட தெலுங்கு சினிமாவில் தான் அதிகம் நடிக்கிறார். ஆனாலும் இவர் எங்கு நடித்தாலும் முத்திரை பதிப்பார். இளசுகளை கவரும் நடனம், கண் அசைவு எல்லாவற்றிலும் மாஸ். சமீபத்தில் வெளிவந்த ஷியாம் சிங்கா ராய் படத்தில் இவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது.
நயன்தாரா:
தமிழ்நாட்டின் லேடி சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்து பெற்ற ஒரே நடிகை.
வைரல் காணொளி:
Then - Now 💕 pic.twitter.com/NCvI27C5uF
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) March 16, 2022