ரெட் வெல்வெட் கேக் ! டாப் ஆங்கிள்'ல டக்கர் போஸ் ! ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

‘நீதானா’ அவன் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அதனைத் தொடர்ந்து, அவர்களும் இவர்களும், உயர்திரு 420, சட்டப்படி குற்றம், விளையாட வா, அட்டகத்தி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த போதிலும், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் என்னும் சில படங்களின் மூலம் ரசிகர்களிடையே அறியப்பட்டார்.

அதன் பின்னர், காக்கா முட்டை படத்தின் மூலம் தமிழ் திரையுலகையும், ரசிகர்களையும் தன் வசம் திரும்ப வைத்தார்.

இவரின் நடிப்புக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவப்படுத்தியது. மேலும், தர்மதுரை, மனிதன், வாடா சென்னை உள்ளிட்ட படங்கள் மூலம் மக்களின் பேராதரவை பெற்றார்.

‘கனா’ படத்தின் மூலம் தனக்கென்ற தனித்துவத்தை பதிய வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்’க்கு தொடர்ந்து வெற்றி படங்களாகவும் அதில் முக்கியத்துவம் நிறைந்த கதாபாத்திரங்களாகவும் அமைந்தது. க/பெ ரணசிங்கம், திட்டம் இரண்டு, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்டவை இவருக்கு மைல்கல்லாக அமைந்தது.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு நிறைய விருதுகளும் அவரது நடிப்பை பாராட்டி கிடைத்தது.

தனது ஒவ்வொரு படத்திற்கும் கதாபாத்திரத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக கவர்ச்சி உடையில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.