AK 61 படத்தில் வாத்தியாக அஜித்.. ஸ்டுடென்ட் ரோலில் இவரா? மாஸ் அப்டேட்..!

AK 61 படத்தில் வாத்தியாக அஜித்.. ஸ்டுடென்ட் ரோலில் இவரா? மாஸ் அப்டேட்..!
அஜித் நடிக்கும் தன் 61 வைத்து படமான #AK61 (ஒர்கிங் டைட்டில்) ப்ரீ-production வேலைகள் விரைவாக நடந்து வருகிறது. வரும் ஏப்ரல் வாரத்தில் ஹைதராபாத்தில் ஷூட்டிங் படப்பூஜையுடன் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் ஏற்கனவே கூறியது படி இந்த படம் பிரபல வெப் சீரிஸ் “மணி ஹேயிஸ்ட்” போல பேங்க் கொள்ளை சம்மந்தப்பட்ட கதை.

படத்தில் அஜித்துக்கென்று சண்டைக்காட்சிகள் அவரின் முந்தய படங்கள் போன்று இருக்காது. இந்த படம் ஒட்டுமொத்தமாக ஹீரோக்கும், வில்லனுக்குமான mind games தான். படத்தின் இன்டெர்வல் நோக்கி செல்லும்போது ஒரு சண்டை, பின்னர் கிளைமாக்ஸில் தான் அடுத்த சண்டையாம்.

இப்போது நமக்கு கிடைத்த இன்னொரு சுவாரிஸ்யமான தகவல் என்னவென்றால் அஜித் இந்த படத்தில் வாத்தியாராக நடிக்கவிருக்கிறார்.

மாணவனாக நடிக்க இருப்பவர் தான் ஆச்சர்யம், வேறு யாருமில்லை. பிரபல தொடரான பிக் பாசில் புகழ்பெற்ற கவின் தான். அஜித்தின் தீவிர ரசிகரான இவர் அஜித் படத்திலேயே நடிப்பதில் பயங்கர உற்சாகமாக இருக்கிறார்.

இன்னும் சில நாட்களில் நிறைய அப்டேட்கள் வரவுள்ளது.