அஜித்தை கிண்டல் செய்த அவர் மகன் ஆத்விக்.. சேட்டை புடிச்ச பையன் போல..

அஜித்துக்கு 2015 ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார். பெயர் ஆத்விக் குமார்.
குடும்பத்தில் எப்பொழுதுமே கடைக்குட்டி ரொம்பவும் சுட்டியாக தான் இருக்கும். ஆத்விக்கும் அப்படி தானாம்.

இதை சமீபத்தில் இயக்குனர் பேரரசு ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
அதாவது விசுவாசம் படம் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்துடன் பேச போன் செய்தாராம்,

அப்போது அஜித் ஷூட்டிங் செய்து கொண்டிருந்ததால் மகனிடம் போனை ஒப்படைத்து சென்றுள்ளார்.
அப்போது பேரரசு கூப்பிட அப்பா நல்லா இருக்காரா என்று கேட்க,

தூக்குதுரை தானே நல்லா தான் இருக்காரு என்று சொல்லி இருக்கு அந்த குட்டி.