மீண்டும் தன் அடுத்த படத்தில் இவருடன் இணையும் அஜித்.. ரசிகர்கள் செம்ம ஷாக்..!

மீண்டும் இணையும் அஜித் - சிறுத்தை சிவா கூட்டணி.. உறுதி செய்த சிவா.. வைரல் அப்டேட்..!
அஜித் பிறந்தநாள் வருகிறது, அதனால் அஜித்தை பற்றிய அப்டேட்ஸ் தினம் தினம் வந்த வண்ணம் உள்ளது.

அஜித் தனது 63வைத்து படத்தின் இயக்குனரையும் முடிவு செய்து விட்டார் என்ற பேச்சு சமூக வலைத்தளங்களில் அடிபட்டு வந்தது.

தற்போது வினோத்துடன் தனது 61வது படத்தில் நடித்து வரும் அஜித், ஏற்கனவே தனது 62வது படத்தின் இயக்குனரையும் முடிவு செய்தார். லைக்கா நிறுவனம் தயாரிக்க விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்குகிறார்.

இப்போது நமக்கு கிடைத்திருக்கும் தகவல்படி அவரின் 63வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இதை அவரிடம் கேட்டபொழுது “இதை அஜித் சாரே அதிகாரப்பூர்வமாகச் சொல்லுவார்!” என்று சொன்னது பச்சைக்கொடி காட்டியது போல தான் உள்ளது.

சிறுத்தை சிவாவும் சூர்யா படத்தில் தற்போது கமிட் ஆகியுள்ளார். அந்த படத்தை அவர் முடிக்க அஜித் அவரின் 62வது படத்தை முடிக்க இருவரும் மீண்டும் இணைய சரியாக இருக்கும்.