போய் 'பீஸ்ட்' படம் பாத்துட்டு வாங்க.. ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த தனியார் நிறுவனங்கள்!!

தளபதி விஜயின் ‘பீஸ்ட்’ படம் நாளை உலகெங்கும் வெளியாகிறது. இதை முன்னிட்டு அனைத்து நகரங்களிலும் இருக்கும் திரையரங்குகளில் கொண்டாட பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் நிலையில், பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் விடுப்பு எடுத்து படம் பார்க்க டிக்கெட் புக் செய்துள்ளனர்.

இதனால் ஒரு சில தனியார் நிறுவனங்கள் அவர்களே தானாக முன்வந்து ஊழியர்களுக்கு விடுப்பு அளித்தது மட்டும் அல்லாமல் டிக்கெட்டையும் அந்த நிறுவனங்களே வாங்கி தந்துள்ளனர்.

இதற்கு முன்னர் இது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்துக்கு மட்டுமே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் வெளிவந்த பெரிய படங்கள், பெரிய அளவில் பிசினஸ் செய்யவில்லை. பீஸ்ட் படம் பெரிய பிசினெஸ் செய்யும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.
Watch New Promo here:
Sounds from the world of #Beast 🔥#BeastFromTomorrow 😎@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @KiranDrk @anbariv #BeastModeON #BeastMovie #TwitterExclusive #OnlyOnTwitter #OOT pic.twitter.com/aNrYuPHdm6
— Sun Pictures (@sunpictures) April 12, 2022