‘என்ன அதுக்குள்ள முடிஞ்சிருச்சு’ - ரிசர்வேசன் தொடங்கிய உடனே விற்று தீர்ந்த பீஸ்ட் படத்தின் டிக்கெட்டுகள்..!

‘என்ன அதுக்குள்ள முடிஞ்சிருச்சு’ - ரிசர்வேசன் தொடங்கிய உடனே விற்று தீர்ந்த பீஸ்ட் படத்தின் டிக்கெட்டுகள்..!

தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கியுள்ளது. ரிசர்வேசன் ஆரம்பம் என்ற செய்தி வந்தவுடன் டிக்கெட் ஓபன் செய்த அனைத்து திரையரங்கிலும் விற்று தீர்த்துள்ளது.

இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
KGF 2 படமும் வருவதால் பீஸ்ட் படத்துக்கு எதிர்பார்த்த வசூல் வராது என்றெல்லாம் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், அதை முற்றிலும் பொய்யாக்கியுள்ளனர் தமிழ் ரசிகர்கள். என்றுமே தமிழ்நாடு பொறுத்தவரை விஜய் படம் வருகிறது என்றால் அந்த படத்துக்கே முன்னுரிமை கொடுப்பார்கள்.

மேலும் சினிமா வல்லுநர்கள், இந்த படம் மிகப்பெரிய வசூலை செய்யும் என்றும் கணித்துள்ளனர். இந்த படம் முதல் நாள் வசூல் 40 கோடியை கடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

ஏனெனில், தளபதி விஜய் தான் தற்போது தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்.
‘என்ன அதுக்குள்ள முடிஞ்சிருச்சு’https://t.co/WciCN2AH8n | #BeastMovie | #BeastUpdate | #BeastFromApril13th | #BeastTicket | @actorvijay | #News7TamilUpdates pic.twitter.com/5ciJHlwXxz
— News7 Tamil (@news7tamil) April 6, 2022