தர்ஷா குப்தா குடுத்த ஹோலி ட்ரீட் ! வைரல் போட்டோஸ் !

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் நடிகை தர்ஷா குப்தா.

தற்போது, கோயம்பத்தூரில் வசித்து வரும் இவர், தனது பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் காலம் முதலே மாடலிங்கில் ஆர்வம் கொண்டு ஈடுபட்டு வந்தவர்.

நடிப்பின் மீது அலாதி பிரியம் கொண்ட இவர், ‘முள்ளும் மலரும்’ என்னும் தொடர் மூலம் நடிக்கத் தொடங்கினார்.

அதன்பின்னர், சன் டிவியில் ஒளிபரப்பான ‘மின்னலே’ தொடரிலும்,

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘செந்தூரப்பூவே’ சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தனது நடிப்பு மற்றும் கவர்ச்சி தோற்றம் மூலம், சின்னத்திரையில் இருந்து கூடிய விரைவில் வெள்ளித்திரையிலும் காலடி வைத்துள்ளார் தர்ஷா.

அந்த வகையில், ரிச்சர்ட் ஹீரோவாக நடிக்கும் ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்துள்ளார்.

இன்னும் பட வாய்ப்புகளை தன்வசம் ஈர்க்க தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் உலாவவிட்டு வருகிறார்.
