ஓ சொல்றியா மாமா.. நடன இயக்குனர் மீது மும்பை போலீஸ் வழக்கு பதிவு.. இத்தனை வழக்குகளா?

ஓ சொல்றியா மாமா.. நடன இயக்குனர் மீது மும்பை போலீஸ் வழக்கு பதிவு.. இத்தனை வழக்குகளா?
சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் வரும் பாடலான ஓ சொல்றியா மாமா வின் நடன இயக்குனர் பாலிவுட் சினிமாவை சேர்ந்த கணேஷ் ஆச்சார்யா. இவர் மிகவும் பிரபலமான successful நடன இயக்குனர் அவர்.

நேற்று இவர் மீது மும்பை போலீஸ் இவ்வளவு வழக்குகளை பதிவு செய்துள்ளது,
IPC 54A (sexual harassment),
IPC 354C (voyeurism),
IPC 354D (stalking),
IPC 509 (insulting the modesty of any woman),
IPC 323 (causing hurt),
IPC 504 (intentional insult with intent to provoke breach of the peace),
IPC 506 (criminal intimidation) மற்றும்
IPC 34 (common intention to commit an offence)

அப்படி என்ன செய்தார் இவர்:
2020ல் தன்னுடன் பணிபுரிந்த ஒரு பெண் இவர் மீது வழக்கு பதிவு செய்திருந்தார். அதை விசாரித்து வந்த போலீஸ் தற்போது இவர் மீது இத்தனை வழக்குகளை பதிவு செய்துள்ளது.

அதாவது பாதிக்கப்பட்ட பெண் கூறியது “கணேஷ் ஆச்சார்யாவின் உதவியாளராக பணிபுரிந்த இந்த பெண் தான் ஆபிஸ் வரும்போதெல்லாம், கணேஷ் ஆபாச படங்களை பார்த்து கொண்டிருப்பார். என்னையும் வலு கட்டாயமாக அழைத்து பார்க்க சொல்வார். நான் பின்னர் இதுபோன்று மறுபடியும் நடந்தால் போலீஸ் complaint கொடுத்து விடுவேன் என்று எச்சரித்தேன் என்று கூறினார்.

பின்னர் இதைப்பற்றி அவரிடம் கேட்டபோது அந்த பெண் யாரென்றே எனக்கு தெரியாது. 2007ம் ஆண்டு நடந்த ஒரு நடன நிகழ்ச்சியில் குரூப் டான்சராக பணி புரிந்துள்ளார். அவ்வளவே என்று கூறினார்.
