காத்து வாக்குல ரெண்டு காதல் படம் இருக்கு? அஜித் இவரை நம்பி அடுத்த படம் பண்ணலாமா?

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் இருக்கு? அஜித் இவரை நம்பி அடுத்த படம் பண்ணலாமா?
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தோட தூண் யாருன்னு சொன்னா டைரக்டர் தான். தமிழ் சினிமாவில் சமீப காலமாவே ஒரு மாஸ் என்டேர்டைனிங் படத்துக்கு மட்டும் தான் மாஸ் ஓப்பனிங், பெரிய ஹீரோக்கு மட்டும் தான் பெரிய ஓப்பனிங் அப்படிங்கிற நிலைமையை மாத்திருக்கு இந்த படம்.

ஒரு ரொமான்டிக் காமெடி படம் rom-com genre. இதுல விக்னேஷ் சிவன் நல்ல ஸ்ட்ரோங். இந்த கதையை சமந்தாவும், நயன்தாராவும் தூக்கி பிடிக்கிறாங்க. விஜய் சேதுபதி கொஞ்சம் underplay பண்ணிருக்காரு.

ஒரு படத்துல ரெண்டு பெரிய ஹீரோயின், ஒரு பெரிய ஹீரோ, சரியா screen space குடுக்கணும் அப்டிங்கிறத ஒடச்சிருக்கு இந்த படம். விஜய் சேதுபதியோட ஒன் லைன் காமெடியா இருக்கட்டும், நீண்ட பெரிய வசன காமெடியா இருக்கட்டும் எல்லாமே சூப்பரா ஒர்கவுட் ஆயிருக்கு.

நயன்தாராவை விட சமந்தா வர்ற காட்சிகளுக்கு விசில் சத்தம் பறக்குது. தன்னோட career பீக்ல இருக்காங்க அப்டிங்கிறத அந்த சத்தம் உணர்த்துது.

என்ன இந்த படத்துல நெகடிவ்வே இல்லையானு கேட்டா, இருக்கு. முதல் பாத்தியா அவ்ளோ ஜாலியா கொடுத்த விக்னேஷ் சிவனோட எழுத்து இரண்டாம் பாதில கொஞ்சம் பிசிறு தட்டுது. சமீபத்தில் வந்த எல்லா பெரிய தமிழ் சினிமாவிலும் இதான் ப்ராப்லம்.
காத்து வாக்குல ரெண்டு காதல் அதோட தலைப்புக்கு ஏற்ற மாதிரி 2ம் பாதி காத்து வாக்குல அப்டியே போய்டுச்சு.

படத்தோட பெரிய பிளஸ் அனிருதோட இசை, கேமராமேன் சூப்பரா ஒர்க் பண்ணிருக்காரு. படம் முழுக்க ரொம்ப கலர்புல்லா இருக்கு. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டூ டூ சாங் இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருக்கலாம். இரண்டு நடிகைகள் போடும் ஸ்டெப்ஸ்க்கு விஜய் சேதுபதி ஈடு கொடுக்க கொஞ்சம் கஷ்ட படுறாரு.

ஆகமொத்தம் அங்கங்க நெகடிவ் இருந்தாலும் படம் பார்க்கலாம்.
ஆனா அஜித் படம் பண்ணும்போது இந்த மாதிரி lag அடிச்சா ரசிகர்கள் செம்ம கடுப்பு ஆய்டுவாங்க.
ரேட்டிங்: 3/5