*தா யாருகிட்ட.. வட இந்திய ரிப்போர்ட்டருக்கு தரமான பதிலடி கொடுத்த கமல்..!

*தா யாருகிட்ட.. வட இந்திய ரிப்போர்ட்டருக்கு தரமான பதிலடி கொடுத்த கமல்..!
விக்ரம் படம் வரும் ஜூன் 3ம் தேதி ரிலீஸ் ஆவதை முன்னிட்டு படத்தை ப்ரொமோட் செய்ய உலகநாயகன் கமல்ஹாசன் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அங்கு வந்த செய்தியாளர்கள் பலர் கேட்ட கேள்விக்கு மிகவும் தெளிவாக பதில் கூறினார். நிறைய ஹிந்தி படங்களை பற்றியும் பேசினார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், சர்ச்சையான கேள்வியான மொழியை பற்றி கேட்டார்.

RRR, KGF 2 படங்களின் மிகப்பெரிய வெற்றி மொழிப்போரை உருவாககியுள்ளது. இதை வைத்து ஒரு கேள்வியை கேட்ட நிருபருக்கு கமலின் பதிலடி,
“நான் இந்தியன், நீங்க யாரு?” மேலும் அவர் தாஜ் மகால் என்னுடையது, மதுரை மீனாட்சி கோவில் உங்களுடையது. அதேபோல் கன்னியாகுமாரி உங்களோடது, காஷ்மீர் என்னோடது என்று தரமான பதில் கொடுத்தார்.

அங்கு வந்தவர்கள் கைதட்டி அந்த பதிலை வரவேற்றனர்.