சாணி காகிதம் - ஒரு பெண்ணின் கோபம். சும்மா ரத்தம் தெறிக்க தெறிக்க.

சாணி காகிதம் - ஒரு பெண்ணின் கோபம். சும்மா ரத்தம் தெறிக்க தெறிக்க.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் & கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணி காயிதம் இப்பொழுது அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.
படம் எப்படி இருக்கு?

சாணி காகிதம் படம் ரொம்ப லைட் நெஞ்சம் படைத்த மக்கள் யாரும் பார்க்க வேண்டாம். அந்தளவுக்கு படத்தில் வரும் ஆக்சன் காட்சிகள் இருக்கும்.
ரொம்ப கொடூரமா பலி வாங்கும் காட்சிகள், அந்த காட்சி அமைப்பு நடிகர்களின் பெர்பார்மன்ஸ் என அனைத்திற்கும் இயக்குனரின் புதிய பார்வை, இந்த படத்தை தமிழ் சினிமாவின் முக்கிய படமாக ஆக்குகிறது.

கீர்த்திக்கு மீண்டும் ஒரு மயில்கல் என்றே சொல்லலாம்….
நடிகையர் திலகம் எந்த அளவுக்கு அழுத்ததை தந்ததோ அதே அளவு பொன்னியும் தந்துவிட்டாள்..!!!
என் பிள்ளையின் உடல் எப்படி தீயில் கருகியிருக்கும் என்ற காட்சியில் அனைவரையும் அழவைத்தாள் என்பதே உண்மை.
செல்வராகவன் மீண்டும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்பது சினிமா ரசிகர்களின் வேண்டுகோள், அப்படி ஒரு அமைதியான உணர்ப்பூர்வமான நடிப்பு.

படத்துல முக்கியமா நெகடிவ் ரோல் பண்றவங்க, அவங்க எந்த அளவுக்கு நல்லா நடிக்கிறாங்களோ அந்த அளவுக்கு படம் நின்னு பேசும். எல்லாரும் சூப்பரா பண்ணிருக்காங்க. பார்க்கும் நமக்கே கோவம் வர்ற மாதிரி.
இயக்குனருக்கு இந்த படம் முதல் படமா இருந்திருக்கணும் என்பது சமூக வலைத்தளங்களில் ஒரு பேச்சு .
மியூசிக், சினிமாட்டோகிராபி எல்லாமே தரம். படத்தில் வேலை செஞ்ச அனைவருக்கும் பாராட்டுக்கள்.

படத்தில் ஓவரா இருக்கு சண்டை காட்சிகள், ஓவரா இருக்கு கெட்ட வார்த்தை அப்டினு வர்ற விமர்சனங்களை இக்னோர் பண்ணுங்க.
இந்த மாதிரி படமும் தமிழ் சினிமாவிற்கு தேவை.
அடுத்த படம் இயக்குனருக்கு தனுஷ் கூட. வாழ்த்துக்கள்.
Rating: 3.25/5