தன் மாஸான தாடி, மீசையை எடுத்த ராக்கி பாய்.. வீடியோ வைரல்..!

யாஷ் அப்டினு ஒரு நடிகர் கன்னட சினிமால இருக்காருன்னு மற்ற மாநில மக்களுக்கு 2018க்கு முன் தெரியாது.
ஆனா கொஞ்சம் பாஸ்ட் forward பண்ணி 2022ல யாஷ தெரியாத இந்திய மக்களே கிடையாது. கிட்ட தட்ட 8 வருட உழைப்பிற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்.

KGF படம் 2015ம் ஆண்டு தொடங்கிருக்காங்க. 2022 வரைக்கும் யாஷ் KGFஓட சாப்டர் 1 மற்றும் 2ல மட்டும் தான் நடிச்சிருக்காரு. இந்த கதை மீது அவர் வைத்த நம்பிக்கை, இயக்குனர் அவரை காட்டின விதம் இப்போ எல்லாருக்கும் லைப் மாறிடுச்சு.

கன்னட சினிமாவோட தலையெழுத்தையே மாற்றி உலக லெவல்ல இந்த படம் மூலமா கொண்டு போயிருக்காங்க.
KGF படம் எந்த அளவுக்கு ரசிகர்களோ, அந்த அளவுக்கு யாஷ் அந்த படத்தில் வைத்திருந்த தாடிக்கும் ரசிகர்கள் உண்டு. ஏன் தமிழ் ரசிகர்கள் இதுவரைக்கும் யாஷ தாடி இல்லாம ஒரு சிலரை தவிர யாரும் பாத்திருக்கமாட்டாங்க.

அவர் தாடியை shave பண்ற வீடியோ தான் இணையத்தில் வைரல். KGF முதல் பாகத்தை முடிச்சிட்டு யாஷ் மனைவியோட வேண்டுகோளுக்கிணங்க shave பண்ணிருக்காரு.

Viral Video: