கமல் சார் வீட்டுக்கு கீழே நின்னு முதல் படம் பார்த்துட்டு கமல் சொன்னது வரை.. லோகேஷ் கனகராஜ் சொன்னது..!

நேற்று விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசியது:
கமல் சார் பத்தி எப்போ பேசணும்னு நினைச்சாலும் பேச முடியாது. அதை அவர் கிட்டயே சொல்லிருக்கேன். நான் சென்னை வந்தப்போ இதுதான் கமல் சாரோட வீடுன்னு ஒரு தடவை ஆட்டோ ட்ரைவர் சொன்னாரு.

சின்ன வயசுல புக்ல படிச்ச ஞாபகம். யாராவது அவர் வீட்டு பக்கம் போகும்போது சார் மாடியில் நிக்கும் போது கை காமிச்சா திருப்பி கைகாட்டுவார்ன்னு படிச்சேன்.
இதுக்காக ஒரு அரை மணிநேரம் சார் வீட்டுக்கு முன்னாடியே நின்ருப்பேன்.

எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. சார் இப்போ வந்து கைகாட்டணும்னு அப்போ வேண்டிக்கிட்டேன். ஆனால் அவருக்கே என்னை Action/Cut சொல்ல வச்சுட்டாரு.

இதை கமல் சார் கிட்ட சொன்னப்போது அவர் வழக்கம் போல ‘நானும் இல்லைன்னு சொல்லல. இருந்தா நல்ல இருக்கும்னு தான் சொல்றேன்’ என சொன்னார்.
surreal ஆ இருக்கு. என் ஊர்ல இருந்து இந்த இடத்துக்கு வந்து சாரை direction பண்ற நிலைல இருக்கேன்னா அதுக்கும் அவர்தான் காரணம், அதுக்கு பின்னாடி 10 வருட உழைப்பு இருக்குனு நினைக்கிறேன்.

சார் உழைப்பு பத்தி சொல்லணும்னா ஒரு நிகழ்வு ஞாபகம் வருது. covid –க்கு பிறகு சார் நடிக்க இருந்த கிளைமாக்ஸ் சீனை நடு ராத்திரி 2 மணிக்கு சூட் பண்ணோம்.
அப்போ அவர் சூட்டுக்கு முன்னாடி triceps மெயின்டைன் பன்றதற்கு 26 pushups எடுத்துட்டு ஸ்பாட்டுக்கு வந்தார். இதைப் பார்த்த பிறகு நாமெல்லாம் இந்த வயசுல பண்றது எல்லாம் உழைப்பே இல்லைன்னு தோணுச்சு.

படம் பார்த்துட்டு ‘சார் எனக்கு படம் பிடிச்சதுன்னு’ சொன்னாங்க. எனக்கு அப்போ தான் ரிலீவ் ஆன மாதிரி இருந்தது.
சின்சியரா வேலை செய்து இருக்கோம். படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்னு நம்புறேன்.
இவ்வாறு லோகேஷ் கனகராஜ் பேசினார்.
அப்போ விக்ரம் படம் கண்டிப்பா சம்பவம் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.