ரஜினி, அஜித் கூட ஒர்க் பண்ணனும்.. தளபதி விஜய் பட இயக்குனரின் ஆசை..!

ரஜினி, அஜித் கூட ஒர்க் பண்ணனும்.. தளபதி விஜய் பட இயக்குனரின் ஆசை..!
இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக அவதாரம் எடுத்திருப்பவர் லோகேஷ் கனகராஜ்.

இவரின் விக்ரம் படம் வரும் ஜூன் 3ம் தேதி வெளியாகிறது. மற்ற மொழி ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு சமீப காலமாய் ஆளாய் வரும் தமிழ் சினிமாவின் பதிலாக இந்த விக்ரம் படம் இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

மேலும் இவர் சமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது தளபதி விஜயின் அடுத்த படமான தளபதி 67 படத்தை இயக்கப்போவதாக உறுதி செய்தார்.

மேலும் வேறு எந்த நடிகர்களை இயக்க ஆசை என்று கேட்டதற்கு, ரஜினி, அஜித் கூட ஒர்க் பண்ணனும் என்று தன் ஆசையை கூறியுள்ளார்.