யார் இந்த மமித்தா பைஜூ..? நேத்துல இருந்து இவங்க தான் ட்ரெண்டிங்.. ஏன்?

யார் இந்த மமித்தா பைஜூ..? நேத்துல இருந்து இவங்க தான் ட்ரெண்டிங்.. ஏன்?
நேற்று சூர்யா நடிக்கும் தன் 41வது படமான “சூர்யா41” படத்தின் அறிவிப்பு வெளியானது. அத்துடன் படத்தின் நடிப்பவர்கள் அறிவிப்பும் வெளியிட்டது படக்குழு. அதில் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியும் நடிக்கிறார். ஆனால், இருக்கு அதே வரவேற்பு இந்த மாமித்தா பைஜூ என்ற நடிகைக்கும் கிடைத்தது.
யார் இந்த மமித்தா பைஜூ?
இவர் மலையாள படங்களில் நடித்து பிரபலமான இளம் நடிகை. இவர் சென்ற வருடம் நடித்த ஆபரேஷன் ஜாவா படம் அனைத்து மாநில ரசிகர்களும் பார்த்து ரசித்தனர்.

அனைத்து விமர்சகராலும் ஒருமனதாக பாராட்டப்பட்ட போலீஸ் திரில்லர் படம். எப்போதுமே எதார்த்த கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மலையாள சினிமா.

அதேபோல் மலையாள நடிகர்களும் எதார்த்த சினிமாவில் தங்கள் எதார்த்த நடிப்பின் மூலம் உச்சம் தொட்டவர்கள் தான். மற்ற மொழிகள் போல பெரிய நடிகர்கள் நடித்தால் தான் படம் ஓடும் என்ற நிலைமை அங்கு கிடையாது.

நல்ல சினிமா யார் நடித்தாலும் ஓடும்.
அதேபோல், தமிழ் சினிமாவும் அங்கு நன்றாக நடிக்கும் நடிகர்களை அழைத்து இங்கு வாய்ப்பு கொடுப்பது வழக்கம்.

அந்த பாணியில் கடந்த வருடங்களில் ரிலீசான அசுரன் படத்தில் மஞ்சு வாரியர், கர்ணன் படத்தில் ரஜிஷா விஜயன், ஜெய் பீம் படத்தில் லிஜோமோல் ஜோஸ் அனைவரும் கேரளத்து நாயகிகளே.
அதேபோல் கோ கோ, ஆபரேஷன் ஜாவா, ராண்டு, சூப்பர் சரண்யா போன்ற படங்களில் தன்னுடைய நடிப்பில் மிரட்டிய மமித்தாவுக்கு பாலா படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

எப்படி இங்கு கேரளாவில் இருந்து இங்கு வந்த நடிகைகள், தங்கள் முத்திரையை பதித்தனரோ அதேபோல் இவரும் இந்த படத்தில் பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

