ட்ராக் மாறுகிறாரா பா.ரஞ்சித்? வெளிவந்த மெகா அப்டேட்.. முழு விவரம்..!

ட்ராக் மாறுகிறாரா பா.ரஞ்சித்? வெளிவந்த மெகா அப்டேட்.. முழு விவரம்..!
இயக்குனர் ப.ரஞ்சித் தமிழ் சினிமாவின் புரட்சிகரமான இயக்குனர்களில் ஒருவர். தான் தன் வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள், கடந்து வந்த பாதை வைத்து புரட்சி படங்களை எடுத்தவர்.

சர்பட்டா பரம்பரை படத்தின் பின் இவர் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்களிடத்தில் இருந்தது. “நட்சத்திரம் நகர்கிறது” படத்தை சீக்கிரம் முடித்துள்ளார். இது ஒரு காதல் கதை. காளிதாஸ் மற்றும் துஷாரா விஜயன் நடிக்கின்றனர்.

இந்த படத்தை அடுத்து சீயான் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்குகிறார். இந்த படத்திற்கான ப்ரீ-production நடந்து வருகிறது.
தற்போது நமக்கு கிடைத்திருக்கும் அப்டேட் படி விக்ரம் படத்தை முடித்த பின்னர், “வெட்டுவம்” என்ற வெப் சீரிஸை எடுக்கவுள்ளார். இந்த படத்தின் முதல் பார்வை கேன்ஸ் பட விழாவில் வெளியிட உள்ளனர்.

இது ஒரு gangster படம் என்பது குறிப்பிடத்தக்கது. புரட்சி படங்களை எடுத்து வந்த இவர் அப்படியே மெல்லமாக ட்ராக் மாறுகிறார்.