பிரியா பவானி ஷங்கரை பாடாய் படுத்தும் ஜிம் மாஸ்டர் ! பாவோ டா என் செல்லலோ ! வைரல் வீடியோ

சினிமா திரைப்படங்களை விட பெண்கள் மத்தியில் எளிதில் சென்றடைந்து வருவது நாடக தொடர்களே! காலம் எவ்வளவு சென்றாலும், டெக்னாலஜி, ஸ்மார்ட் போன், ரோபோட் என எது மாறினாலும் ‘சீரியல்’களுக்கு உண்டான மவுசு குறைவதே இல்லை.

தற்போது, சீரியல் என்றாலே விஜய் தொலைக்காட்சி என ஆக அதில் வரும் அனைத்து தொடர்களுக்கும், அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும், மேலும் அவர்கள் உடுத்தும் உடை என எல்லாவற்றிற்கும் ஆர்மி, fan followers, fan page என சினிமா நடிகைகளை விட வரவேற்பு அதிகம்.

அந்த வகையில், புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் பிரியா பவானி ஷங்கர். இதனைத் தொடர்ந்து, கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடர் மூலம் மிக பிரபலம் அடைந்தார். பின்னர், சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்த பிரியா பவானி, வைபவ் உடன் ‘மேயாத மான்’ படத்தில் நடித்தார்.

அதனைத் தொடர்ந்து, மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம், மாஃபியா, களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், தற்போது, கசட தபற, குருதி ஆட்டம், ஓ மணப்பெண்ணே, பொம்மை, ஹாஸ்டல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் திரையுலகில் பிசியாக வலம் வரும் இவருக்கு, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் ரசிகர்கள் ஏராளம். இது மட்டுமின்றி, அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் இவர் பதிவிடும் பதிவிற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட் மூலம் தங்கள் அன்பை பொழிந்து வருகின்றனர் ரசிகர்கள்.