நள்ளிரவு 3 மணிக்கு ரஜினியிடமிருந்து வந்த போன் கால்.. இயக்குனருக்கு என்ன நடந்தது?

நள்ளிரவு 3 மணிக்கு ரஜினியிடமிருந்து வந்த போன் கால்.. இயக்குனருக்கு என்ன நடந்தது?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நல்ல படம் பார்த்து அவருக்கு பிடித்துவிட்டால், உடனடியாக சம்மந்தப்பட்ட இயக்குனர் படத்தில் படித்தவர்களுக்கு அழைத்து பாராட்டுவது உண்டு.

அந்த லிஸ்டில் புதிதாக இணைந்த இயக்குனர், இயக்குனர் சீனு ராமசாமி. எதார்த்த கதைகளையே கதைக்களமாக வைத்து எடுக்கும் இவர், தற்போது விஜய் சேதுபதியை வைத்து மாமனிதன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

மே மதம் ரிலீஸ் ஆகும் இந்த படத்தின் பிரீமியர் பார்த்தவர்கள் அனைவரும் இந்த படத்தை புகழ்ந்து பேசியுள்ளனர். எப்படியோ ரஜினியும் இந்த படத்தை பார்த்துள்ளார்.

படம் பார்த்தவுடன் ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போய் இயக்குனர் சீனு ராமசாமியை நள்ளிரவிலேயே அழைத்து பாராட்டை தெரிவித்துள்ளார். இதனால் மகிழ்ச்சியில் உச்சத்துக்கே சென்ற சீனு ராமசாமி பதிலுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து போனார்.
பின்னர் “உங்கள் பாராட்டு எனக்கு புதிய தெம்பை அளித்துள்ளது” என்று கூறி நெகிழ்ந்திருக்கிறார்.

இயக்குனர் சீனு ராமசாமி தான் தென்மேற்கு பருவக்காற்று, கண்ணே கலைமானே, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Trailer: