சம்மருக்கு இதமா உள்ளாடையுடன் நிக்கிறதோடு வீடியோ போட்டு சூடேத்தும் ராகுல் ப்ரீத் சிங்

2014ம் ஆண்டு தமிழில் கெளதம் கார்த்திக் ஜோடியாக ‘என்னமோ ஏதோ’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இதற்கு முன், யுவன், தடையற தாக்க உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த படங்கள் மற்றும் பாத்திரங்கள், எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறா விட்டாலும், இவரது ஆக்ட்டிங் பிடித்து போகவே, இப்படத்திற்கு பின், இவருக்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

2019ம் ஆண்டில் தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களில் நடித்தார். இருபடங்களும் தோல்வியை தழுவவே, தெலுங்கில் மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.

ஹிந்தியில் டி டி பியார் டி, மர்ஜவான் ஆகிய இரண்டு படங்களும் வசூல்ரீதியாக நல்ல வரவேப்பை பெற்றது.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வந்த நிலையில், தற்போது தமிழில் இந்தியன்-2, அயலான் படங்கள் மட்டுமே கை வசம் உள்ளது.

பிற மொழிகளிலும் பெரிய படங்கள் ஏதும் கமிட் ஆகாத நிலையில், தனது மார்க்கெட்டை மீட்டு மேலே கொண்டு வர தீயாக வேலை செய்து வருகிறார்.

பொதுவாக இவரின் உடல்வாகு, எக்ஸ்பிரஷன்ஸ் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், இதனை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் தாராளம் காட்டி போட்டோஸ்களை பதிவிட்டு வருகிறார்.