'அரசியலுக்கு போயிரவா, பொய் பேசணும் பா' -உதயநிதி ரியாக்சன் வீடியோ ட்ரெண்டிங்.

நேற்று கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது டான் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்.
இதில் டான் படத்தில் வேலை செஞ்ச படக்குழுவினர், ரசிகர்கள், முன்னனி பத்திரிகையாளர்கள் என ஏகப்பட்டோர் கலந்து கொண்டனர்

சிறப்பு விருந்தினராக படத்தை தமிழ்நாடு முழுவதும் டிஸ்ட்ரிபூட் செய்யும் திமுக சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டார்.

அப்போது படத்தின் ட்ரைலர் நேற்று போடப்பட்டது. அதில் ஒரு வசனம் வரும். சிவகார்த்திகேயன் மிர்ச்சி விஜய்யிடம் ‘நான் வேணா அரசியலுக்கு போயிரவா’ என்று கூறுவார் அதற்கு அவர் ‘நிறைய பொய் பேசணும் பா’ என்று சொல்வார்.

இந்த வசனம் வரும்போது உதயநிதி ரியாக்சனை படம் பிடித்திருக்கிறார் கேமெராமன்.

அந்த விடியோவை கொஞ்சம் நகைச்சுவையாய் எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் வைரல் செய்திருக்கின்றனர்.
வைரல் வீடியோ:
Don Trailer SK - UdhayaNithi 😂😂 pic.twitter.com/qE3APRsiOj
— T V A Rockers ツ (@TVA_Rockers) May 6, 2022