உங்களோடு பேசிய அந்த 60 நிமிடம்.. ரஜினியை சந்தித்த சிவகார்த்திகேயன்..!

சிவகார்த்திகேயன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்று நாம் அறிவோம். அவர் படத்தில் செய்யும் நடை, உடை, பாவனையில் ரஜினிகாந்த் reference இல்லாமல் இருக்காது.

தற்போது இவரின் டான் படம் வெளியாகி திரையரங்கில் வெற்றிநடை போட்டு வருகிறது. இதன் மூலம் back டு back 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறார். முதலில் டாக்டர், இப்போது டான்.

ரஜினிக்கு எப்போதுமே ஒரு குணம் உண்டு. நல்ல படங்களை பார்த்தால் அந்த படக்குழுவினரை அழைத்து பாராட்டுவது வழக்கம்.

டான் படத்தை பார்த்துவிட்டு சிவாவை கூப்பிட்டு பாராட்டியுள்ளார். இதை ஒரு பதிவாக சிவா அவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
With the DON of Indian cinema 🙏❤️ Met super star @rajinikanth sir and got his blessings.. That 60 minutes will be a lifetime memory..Thank you so much Thalaiva for your time and valuable appreciations for #DON 🙏🙏❤️❤️❤️ pic.twitter.com/mG1Pgbrjb7
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 30, 2022