கடற்கரையில் 'வேற மாதிரி' போஸ் கொடுத்த சோனியா அகர்வால்.

Sonia Agarwal Recent Click

7ஜி ரெயின்போ காலனி படத்தில் அனிதா கதாபாத்திரத்தை தமிழ் மக்கள் மறக்கவும் வாய்ப்பில்லை, சோனியா அகர்வாலை மக்கள் மறக்கவும் வாய்ப்பில்லை.

செல்வராகவனுடன் திருமண முறிவுக்கு பின் இவர் வேறு எந்த திருமணமும் செய்துகொள்ளவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின்பு நிறைய படங்கள் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த தனிமை படம், விஷாலுடன் அயோக்கியா படம் என்று அவரை பெரிய திரையில் பார்த்தோம்.

தற்போது ‘கிராண்மா’ என்னும் படத்தில் சோனியா ஆசிரியையாக நடித்துகிறார். பல படங்களில் சாதுவான பெண்ணாகத்தான் தான் நடித்திருப்பார். ஆனால் நான் நிஜத்தில் அப்படி இல்லை, மிகவும் துணிச்சலானவராம். நேரில் பார்த்தாலும் அப்படி தெரியாது என்று அவரே கூறியுள்ளார்.

மிகவும் கவர்ச்சியாக ஒருவர் முகம் சுளிக்கும் வண்ணம் இவர் நடிக்கமாட்டார். அதேபோல் இவர் பதிவிடும் புகைப்படங்களும் அப்படி இருக்காது. சமீபத்தில் இவர் கடற்கரையில் சூரிய வெளிச்சத்துடன் எடுத்த வேற மாதிரி செல்பி தான் வைரல்.

Related Posts

View all