வெளியானது தகவல். மிரட்டல் மும்பை தாதாவாக தளபதி விஜய். முதல் gangster படம். முழு விவரம்.
தளபதி 66 (a) வாரிசு படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் 20ம் தேதியுடன் முடிகிறது. படத்தில் கடைசி நிலை படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று வருகிறது. படத்தில் தளபதி விஜயின் பெயர் ராஜேந்திரன் என்று கூறுகின்றனர். விஜய் ராஜேந்திரனாக இருக்கலாம் என்பது எண்களின் எதிர்பார்ப்பு. ராஜேந்திரன் க்ரூப் ஆப் கம்பனிஸ் குழுமத்தின் மூன்றாவது வாரிசு தான் தளபதி. சரத்குமார் அப்பா.
இதுவரை சமீபத்தில் தனியார் பத்திரிகைக்கு படக்குழு கொடுத்த சில சுவாரிஸ்யமான தகவல்கள்: படம் அப்பா - மகனுக்கிடையிலான உறவை பற்றிய கதை படத்தில் 6 பாடல்களில் ஐந்து மெலடி ஸ்ரீகாந்தும், ஷாமும் சகோதரர்களாக ஆல் தோட்ட பூபதி சாங் ரீமிக்ஸ் செய்யப்படுகிறது என்று ஒரு வதந்தி.
இன்னும் தளபதி 66 படத்தின் சூடே தணியாத நிலையில், தளபதி 67 படத்தின் அறிவிப்பை பல அதிகாரபூர்வமான சினிமா தளங்கள் வெளியிட்டுள்ளது. அதாவது இந்த படத்தில் விஜய் ஒரு காங்ஸ்டராக வருகிறார். மாநகரம் எடுத்த போது, அதற்குப்பின் நடந்த ஒரு நேர்காணலில் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ப்ருட்டலாக கதை பண்ணி வருவதாக அப்போதே லோகேஷ் குறிப்பிட்டார்.
பின்னர் விக்ரம் படத்தின் போஸ்ட் ரிலீஸ் விழாவில், உங்களின் அடுத்த படம் என்னவென்று கேட்டபோது அப்போது எழுதிய காங்ஸ்டர் படம் தான் அடுத்து என்று கூறினார். தற்போது அந்த கதை மும்பையில் இருந்து தொடங்க இருக்கிறது. தமிழ் சினிமாவின் காங்ஸ்டர் என்றாலே மும்பை தான் நியாபகத்துக்கு வரும். பாட்ஷா,நாயகன், அஞ்சான் போன்ற படங்கள் அங்கு நடக்கும் கதையை எடுத்துதான் மிகப்பெரிய ஹிட் கொடுத்தனர் (அஞ்சானை தவிர்த்து).
இன்னும் 67 படத்தின் அப்டேட் வருவதற்கு கொஞ்ச நாட்களே இருக்கிறது. தளபதி விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ஆரம்பம் ஆகவுள்ளது. தீபாவளிக்கு வாரிசு முதல் சிங்கிள்.
Tweet:
67: The new Bombay Gangster 🔥
— LetsCinema (@letscinema) October 6, 2022