தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் தளபதி விஜய் நடிக்கும் அவரது 66வது படம் ஏப்ரல் மாதம் பட பூஜையுடன் தொடங்குகிறது.

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் தளபதி விஜய் நடிக்கும் அவரது 66வது படம் ஏப்ரல் மாதம் பட பூஜையுடன் தொடங்குகிறது.
படத்தின் pre-production ஆரம்பித்த நிலையில் cast & crew அதாவது படத்தில் யார் யார் வேலை செய்ய இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இந்த படத்தை பொறுத்தவரை பிரகாஷ்ராஜ் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். போன வருடம் அவர் கொடுத்த பேட்டியில் இதை அவரே உறுதி செய்தார்.

பின்னர் எந்திரன், திருமலை, வாரணம் ஆயிரம் படங்களில் வேலை செய்த ரத்னவேலு தான் ஒளிப்பதிவாளர் என்று சொல்லப்பட்டது. ஆனால் படக்குழு அவரை அணுகிய போது ஒரு படம் கமிட் ஆனதால் தளபதி 66 படம் செய்ய முடியவில்லை என்று கூறியிருந்தார்.

கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குவின், பிரபாஸ் நடிக்கும் மெகா பட்ஜெட் படமான ஆதிபுருஷ் படத்தில் வேலை செய்த Karthik Palani தான் ஒளிப்பதிவாளர் என்று சொல்லப்படுகிறது.

மேலும், விஜய்க்கு ஜோடியாக முதலில் கியாரா அத்வானி என்று கூறினர், பின்பு ரஷ்மிக்கா மண்டனா என்று கூறினர். இரண்டு நாட்களுக்கு முன் சமீபத்தில் பாலிவுட்டை கலக்கிய கீர்த்தி சனோன் என்று கூறினர்.

ஆனால் தற்போது கிடைத்திருக்கும் அப்டேட் படி எம்.எஸ்.டோனி படத்தில் நடித்த திஷா பாட்டனி என்று நம்பகத்தக்க வட்டாரங்கள் கூறுகிறது.

இன்னும் சில தினங்களில் இந்த அறிவிப்பு வரும்.
தளபதி விஜயும், திஷாவும் ஏற்கனவே ஒரு விளம்பரத்தில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Video:
. @actorvijay and Disha patani acted together for Jos alukkas ad.
— santhosh (@SanthoshNanban) March 30, 2022
Let's wait for official update.
Kriti Sanon or Disha. Both looks great pair pic.twitter.com/GbLZf0RaOC