வீரம் படத்துல அஜித் கூட நடிச்ச பொண்ணா இது ! ஹீரோயின் மெட்டீரியல் மாறி இருக்கே ! லேட்டஸ்ட் போட்டோஸ் !

Veeram child actress yuveena latest photos

திரையுலகை பொறுத்தவரை குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகைகள் பலரும் வருடங்கள் கழித்து டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிப்பது வழக்கம். உதாரணமாக, நடிகை மீனா ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் முத்து படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பலரும் தற்போது இளம் நடிகைகளாக மாறி வருகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டு, அனிகா, அம்மு அபிராமி, கேபிரியல்லா இன்னும் பலர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து நல்ல வரவேற்பைப் பெற்ற குழந்தை யுவினா.

திரைப்படங்களில் மட்டுமல்லாது சீரியல் தொடர்களிலும் நடித்துள்ள இவர், விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.

சினிமாவில் ஆரம்பத்திலிருந்தே அதிகம் ஆர்வம் இருந்ததால் சென்னையிலேயே செட்டிலான யுவினா, தமிழில் மேலும் அரண்மனை, கத்தி, மஞ்சப்பை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, கன்னடத்தில் உருவாகும் மம்மி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை யுவினா ஆளே மாறிப் போய் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறி இருக்கிறார் அதன் புகைப்படத்தை தற்போது வைரல் ஆகி வருகிறது.

Veeram child actress yuveena latest photos

Related Posts

View all