தளபதி விஜய் - தளபதி ஸ்டாலின் சந்திப்பு.. ஒரு குட்டி கதை.. UNSEEN VIDEO..!

தளபதி விஜய் - தளபதி ஸ்டாலின் சந்திப்பு.. ஒரு குட்டி கதை.. UNSEEN VIDEO..!

தமிழ்த் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் இல்ல திருமண விழாவில் தளபதி விஜய் கலந்து கொண்டார். அதே சமயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தளபதி விஜய் - தளபதி ஸ்டாலின் சந்திப்பு.. ஒரு குட்டி கதை.. UNSEEN VIDEO..!

விஜய் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து திரும்பும் பொழுது முதல்வர் ஸ்டாலின் அங்கு வந்தார். அவர் வரும் வரை மேடையிலேயே மரியாதையின் அடிப்படையில் நின்று வணக்கம் தெரிவித்தார்.

தளபதி விஜய் - தளபதி ஸ்டாலின் சந்திப்பு.. ஒரு குட்டி கதை.. UNSEEN VIDEO..!

இந்த தருணத்தில் தளபதி விஜய் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இருவரும் சந்தித்து கைகுலுக்கி பேசிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

தளபதி விஜய் - தளபதி ஸ்டாலின் சந்திப்பு.. ஒரு குட்டி கதை.. UNSEEN VIDEO..!

பின்னர் உதயநிதி ஸ்டாலினும் விஜயும் ஹக் செய்து ஒரு சில நொடிகள் பேசி விடைபெற்றார். கடைசியாக விஜய் ஸ்டாலின் சந்தித்து கொண்டது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாத சமயத்தில் நடந்தது. காவேரி மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சை பெற்று வந்த போது ஸ்டாலினை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் விஜய்.

தளபதி விஜய் - தளபதி ஸ்டாலின் சந்திப்பு.. ஒரு குட்டி கதை.. UNSEEN VIDEO..!

அதன்பிறகு பல மாதங்களுக்கு பிறகு இருவரும் நேரில் சந்தித்து கொண்டுள்ளனர்.

ஸ்டாலின் முதல்வரான பின்பு பலரும் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து, கொரோனா 2ம் அலைக்கு CM relief fundக்கு 50 லட்சம் வழங்கினார். தமிழில் தற்போதைய உச்ச நடிகர்களான விஜய், அஜித் அந்த சமயத்தில் வாழ்த்து கூறவில்லை என்ற பலவிதமான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவின.

தளபதி விஜய் - தளபதி ஸ்டாலின் சந்திப்பு.. ஒரு குட்டி கதை.. UNSEEN VIDEO..!

ஒரு சில பத்திரிகையாளர்கள் கூட விஜய்க்கும் ஸ்டாலினுக்கும் இடையில் பிரச்சனை இருக்கிறது அதனால் தான் வாழ்த்து கூறவில்லை என்று பல கருத்துக்கள் வெளியாயின. நேற்று நடந்த இந்த சந்திப்பு, இருவரும் மாறி மாறி செய்த புன்னகையில் தெரிந்தது கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை என்று.

தளபதி விஜய் - தளபதி ஸ்டாலின் சந்திப்பு.. ஒரு குட்டி கதை.. UNSEEN VIDEO..!

தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படம் கூட உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் தான் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

View all