படத்தில் தரமான சீன்லாம் இருக்கும் போலயே. விஷ சுனைனா செம்ம pair. லத்தி லேட்டஸ்ட் செம்ம வீடியோ வைரல்.
விஷாலின் லத்தி படத்துக்கு என்னச்சுன்னே தெர்ல, அப்போப்போ வந்து ஒரு பாட்டு இல்ல மேக்கிங் இல்ல எதாவது டீசர் மட்டும் ரிலீஸ் பண்ணிட்டு போயிட்டு இருக்காங்க. இரண்டு மாதம் ஆச்சு ஆடியோ எல்லாம் ரிலீஸ் பண்ணி. தீபாவளிக்கு எல்லாம் ரிலீஸ் பன்னிருந்த படம் செம்மயா போயிருக்கும், ஏனென்றால் டீசர் create பண்ண இம்பாக்ட் அப்படி. எப்படி தான் நல்ல ரிலீஸ் தேதி எல்லாம் விட்டுட்டுட்டே இருக்காங்களே என்று தெரியவில்லை.
சுனைனாவையும் திரையில் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு, இதில் விஷால் சுனைனா pair பார்க்கவும் ரொம்ப எதார்த்தமா இருக்காங்க. இந்த படத்துக்கு ஆரம்பத்தில் முதலே ஒரு பாசிட்டிவ் வைப்ஸ் தான். எல்லாமே நல்லா இருக்கு ஆனால் படம் மட்டும் அவரால. டிசம்பர் மாதம் அச்சும் ரிலீஸ் பண்ணுங்கப்பா. ஏனென்றால் பொங்கலுக்கு இரண்டு பெரிய படங்கள் வேற வருது, அப்போ பிளான் செய்தால் திரையரங்குகள் கிடைக்காது. எப்படியும் பொங்கலுக்கு பின் இரண்டு வாரத்திற்கு வாரிசு, துணிவு தான்.
எங்களுக்கு என்ன தோன்றுகின்றது என்றால் உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை வாங்கி ரிலீஸ் பண்ண நிறைய வாய்ப்பு இருக்கு. இதை சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு ஹிண்ட் மாதிரி கொடுத்தாரு. அப்படி நடந்தால் இந்த படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸாக இருக்கும். நண்பனுக்கு உதவி செய்யாமையா, கண்டிப்பா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஷாலை நம்பி பணம் போட்ட ராணா, நந்தாவுக்கு இந்த படம் ரொம்ப முக்கியமான படம். இதை வெச்சு தான் அவங்க இன்வெஸ்ட் பண்ண காசை எடுக்கமுடியும்.
Night drive யாரும் இல்லா வீதியில் போகும் போது இந்த பாடலை repeat mode-ல் வைத்து drive பன்னால் வேற லெவல். யுவன் யாரென்று இந்த மாதம் தெரிவிக்கின்றது. இது யுவனின் மாதம். இப்போதான் லவ் டுடே படம் மூலம் செம்ம இசை கொடுத்தாரு, அதற்குப்பின் இந்த படம். சுவேதா வாய்ஸ் இருக்கே, அய்யோ சுண்டி இழுக்கிறது. யுவனின் இசையால் போதை ஆகிறேன். இப்போ இந்த வீடியோ பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
Video: