நல்லா இருக்கா ? புதுசா ட்ரை பண்ணும் யாஷிகா ஆனந்த் ! ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி ! Latest Click

டெல்லியில் பிறந்து சென்னையில் வளர்ந்த யாஷிகா ஆனந்த், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் பிரபலம் அடைந்தவர்.
2016ம் ஆண்டு, ஜீவா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ படத்தில், நீச்சல் சொல்லித் தரும் டீச்சராக யாஷிகா நடித்திருந்தார். அதன் பின்னர், துருவங்கள் பதினாறு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பாடம், மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். இருப்பினும், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இவர் நடித்த கவர்ச்சி பாத்திரத்தின் மூலமே அதிக பிரபலம் அடைந்தார். இதன் மூலம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அதில் பங்கேற்று என்னதான் நன்றாக இவர் திறமையை காட்டி விளையாடிய போதிலும், கவர்ச்சி உடை, சக போட்டியாளரான மஹத் உடன் இவர் செய்த காதல் லீலைகள், ஐஸ்வர்யா தத்தா வுடன் நட்பு என சில நெகட்டிவ் விமர்சனங்களும் இவருக்கு கிடைத்தது.

பிக் பாஸ்’ல் 5வது இடம் பிடித்த யாஷிகா, 5 லட்ச ரூபாய் பரிசு தொகை பெற்றார். பின்னர், zombie என்னும் படத்தில் நடித்தார். இதன் நடுவே, சமூக வலைத்தளங்களில் தவறாது தனது கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் அப்லோட் செய்தும் வந்தார்.
யாஷிகா தனது சமூக வலைதள பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிடவே, அது தற்போது வைரல் ஆகி வருகிறது.