ஐபிஎல்'ல் ரெய்னா ! புதிய அவதாரம் எடுக்கும் சுரேஷ் ரெய்னா.. சின்ன தல இஸ் பேக்

சச்சின், தோனி, விராட் கோலி அவர்களின் வரிசையில் ஸ்டைல், மாஸ் என அத்தனைக்கும் பெயர் போனவர் சுரேஷ் ரெய்னா.

ரசிகர்கள், ரசிகைகள் என சினிமா பிரபலத்தின் ரேஞ்சுக்கு இவருக்கு மாஸ். ஒவ்வொரு முறையும் ஐபில் மேட்சில் இவரது ஆட்டம் புகழ்ந்து பேசப்படும்.

ஆனால், எதிர்பாராத வகையில் தற்போது வருகிற IPL 2022 மேட்சில் இவரை எந்த அணிக்காகவும் ஏலத்தில் எடுக்காத நிலையில், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது, அவர்களுக்கு சந்தோசம் தரும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் வரும் IPL’ல் ரெய்னா ஹிந்தி கமெண்ட்ரி கொடுக்க கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது.