கிங் கோலிக்கு "God of Honour" வைரல் வீடியோ !

Virat kohli given as god of honour

இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முன்னதாக 3 டி20 போட்டியிலும் தோல்வியுற்று தொடரை இழந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் தொடங்கியது.

இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் விராட் கோஹ்லி தனது 100வது டெஸ்டில் களமிறங்கினார். முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

100வது டெஸ்டில் விளையாடுவதோடு கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ரன்களைக் குவித்த 6வது இந்திய வீரர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் (15921), ராகுல் டிராவிட் (13288), சுனில் கவாஸ்கர் (10122), விவிஎஸ் லக்ஷ்மண் (8781), வீரேந்திர சேவாக் (8586) ஆகியோருடன் கோஹ்லி 8000 ரன்களைக் கடந்து உள்ளார். ஒட்டுமொத்தமாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ரன்களைக் குவித்த 33வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

Related Posts

View all