குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வெளியேறிய ஜேசன் ராய்.. சின்ன தல ரெய்னாக்கு வாய்ப்பா..?

Will raina be the alternate for jason roy in gujarat titans in upcoming ipl 2022

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022ன் மெகா ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 2 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேசன் ராய்ஆட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இது முதல் ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

2020ம் ஆண்டில், டெல்லி கேப்பிடல்ஸ் ராயை 1.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது, ஆனால் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். இவருக்கு பதில் யாரு அணியில் பங்கேற்க போகின்றது என்பது இன்னும் முடிவாகவில்லை.

ராய் இதற்கு முன்பு குஜராத் லயன்ஸ் (2017), டெல்லி டேர்டெவில்ஸ் (2018) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2021) ஆகிய அணிகளுக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது. 2021 ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்கு மாற்றாக இவர் சேர்க்கப்பட்டார்.

ராய் 13 ஐபிஎல் போட்டிகளில் 129.01 ஸ்ட்ரைக் ரேட்டில் 329 ரன்கள் எடுத்துள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) 2022ல் ராய் 170.22 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 303 ரன்கள் குவித்ததோடு, இரண்டு அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்தார்.

இவர் விலகியதால், ஏலத்தில் எடுக்கப்படாது இருக்கும் நம்ம சின்ன தல ரெய்னாவிற்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என செய்திகள் உலாவி வருகிறது.

Will raina be the alternate for jason roy in gujarat titans in upcoming ipl 2022

Related Posts

View all