உக்ரைன்-ரஷ்யா போர் எதிரொலி...சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் தடை: விலை உயருமோ என்ற அச்சத்தில் மக்கள்.!!

Ukraine Russia War Cookingoil

சென்னை: ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருவதால் சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், எண்ணெய் விலை உயருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போர் காரணமாக, இந்தியாவில் பல பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

ரஷியா-உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருவதால் சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் தடை ஏற்பட்டுள்ளது.

போர் தொடங்குவதற்கு ஒருவாரத்துக்கு முன்பே சமையல் எண்ணெய் விலை உயரத் தொடங்கியது. கொரோனா பாதிப்பு காரணமாக சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு 150 ரூபாயை தாண்டியுள்ளது. தற்போது திடீரென சூரியகாந்தி எண்ணெய் விலை நூறு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. போருக்கு முன்பு வரை சூரியகாந்தி எண்ணெய் 1 லிட்டர் ரூ.140க்கு விற்கப்பட்டது.

போர் தொடங்கிய பின்னர் இந்த விலை படிப்படியாக அதிகரித்தது. ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.165 முதல் 178 வரை தற்போது விற்கப்படுகிறது. சில்லரை விற்பனையில் இதன் விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் ரூ.196 வரை விற்கப்படுகிறது. பாமாயில் மலேசியா, இந்தோனேசியா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த போரினால் பாமாயில் ஏற்றுமதியை இந்த நாடுகள் குறைத்துள்ளன. இதுவே இந்த விலை ஏற்றத்துக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Posts

View all