கீவ் தலைநகரில் ஊரடங்கு விலக்கப்பட்டது: மேற்கு உக்ரைன் பகுதிகளுக்கு செல்ல இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்..!!

கீவ்: கீவ் நகரில் அமலில் இருந்த ஊரடங்கு விலக்கப்பட்டுள்ளதால் , இந்திய மணவர்கள் அருகிலுள்ள ரயில் நிலையங்களுக்கு சென்று மேற்கு உக்ரைன் பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கீவ் நகரில் அமலில் இருந்த ஊரடங்கு விலக்கப்பட்டுள்ளதால் , இந்திய மணவர்கள் அருகிலுள்ள ரெயில் நிலையங்களுக்கு சென்று மேற்கு உக்ரைன் பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதற்காக சில சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைவரும் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் ஒன்றிணைந்து இருக்கவும். ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் மற்றும் நீண்ட வரிசயில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவும் என்பதால் பொறுமையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ரயில்கள் குறித்த நேரத்தில் வருவதற்கு காலதாமதம் ஏற்படலாம். சில ரயில்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்படலாம். இந்திய மாணவ்ர்கள் போதுமான பணம், உணவு, தங்களுடைய பாஸ்போர்ட் மற்றும் அத்தியாவசிய உடைமைகள் போன்றவற்றை தயாராக எடுத்து கொண்டு வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தேவையில்லாத பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம். உக்ரைன் மக்களும் அதிகாரிகளும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற துணை நிற்கிறார்கள். அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கேட்டு கொள்கிறோம்.
இந்த தகவலை உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, அங்குள்ள இந்திய தூதரகம் உக்ரைனில் உள்ள இந்திய அதிகாரிகளுக்கு தெரியாமல் எந்தவொரு இந்தியரும் எல்லைப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தது
இந்நிலையில், உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்கள் விசா இன்றி போலந்து வர அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப வசதியாக போலாந்தில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.