நெஞ்சுக்கு நீதி வெல்லட்டும்.. ஆ.ராசா பாராட்டு..!

உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த ‘நெஞ்சுக்கு நீதி’ படம் நல்ல விமர்சனங்களுடன் திரையரங்கில் வெற்றிநடை போடுகிறது.

இந்த வருடம் வெளிவந்த படங்களிலேயே இந்த படத்துக்கு தான் விகடன் மார்க் அதிகம்.
தற்போது திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜா இந்த படத்தை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியது,
ஒரு மனிதன் பொதுத்தொண்டு ஆற்ற வேண்டும் கருதுவானேயானால் அவன் முதலாவதாக செய்ய வேண்டியது சாதியை ஒழிக்கப்பாடுபடுவது தான் என்றார் பெரியார்.

இந்த படத்தின் வாயிலாக உங்களுக்கு பொதுத் தொண்டு ஆற்ற எல்லா தகுதியும், உரிமையும் மட்டுமல்ல, வீரியமும், விவேகமும் உண்டு என்று கண்டுணர்ந்து பாராட்டுகிறேன்.
வாழ்த்துகிறேன். நெஞ்சுக்கு நீதி வெல்லட்டும்.
