கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும்.. அமித் ஷாக்கு கனிமொழி MPயின் பதிலடி..!

கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும்.. அமித் ஷாக்கு கனிமொழி MPயின் பதிலடி..!
இந்தியாவில் ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி பேசுங்கள் என்று கூறிய அமித் ஷாவின் கருத்துக்குஅரசியல் தலைவர்கள் பலர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
அரசியல் தலைவர்கள் ரியாக்சன்:
1.) இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும். ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
-கனிமொழி MP, திமுக

2.) இந்தியை திணிப்பதன் மூலம் பன்முகத்தன்மையை சீர்குலைக்க பாஜக முயன்றால் கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும்.
-கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ்

3.) அரியணையில் யார் உட்காருவது ஆங்கிலமா? இந்தியா? என்றால் எங்கள் பதில் எட்டாவது அட்டவணையின் 22 மொழிகளுமே.
ஹிந்தியைத் தவிர மற்ற மொழிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதும், ஆங்கிலத்தை அகற்றுவதுமே ஒன்றிய அரசின் தந்திரம்.
தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள்.
-சு.வெங்கடேசன் MP, கம்யூனிஸ்ட்
