திமுக சொத்து பட்டியல் நாளை வெளியிடப்படும் என அண்ணாமலை ட்வீட்
இன்றைய அரசியல் ஆட்டம்.
நாளை திமுக ஊழல்கள் குறித்து DMK files வெளியிடும் சகோதரர் அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள். பிறக்க உள்ள சோபகிருது வருடம் தூய்மையான தமிழகத்திற்கு வழிவகுக்கட்டும் என்று எச்,ராஜா கருத்து.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார் கூறி மேலும் ஒரு பாஜக மாநில நிர்வாகி விலகல்!
“கட்சி நிர்வாகிகளிடம் லஞ்சமாக அண்ணாமலை பணம் கேட்டு தொந்தரவு செய்தால் தமிழ்நாட்டில் பாஜக கட்சி ஒருபோதும் வளராது” -மாநில பாஜக பொருளாதார பிரிவு செயலாளர் கிருஷ்ண பிரபு.
ஆருத்ரா பண முதலீடு மோசடியில் அண்ணாமலை உள்பட பலருக்கு தொடர்பு இருப்பதாக பாஜக அலுவலகம் கமலாலயத்தை முற்றுகையிட்டு அண்ணாமலைக்கு எதிராக கோஷம் எழுப்பிய ஆருத்ரா பண மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள்!
திமுக அமைச்சர்களின் சொத்து ஊழல் பட்டியல் என்று அண்ணாமலை கூறினார் ஆனால் தற்போது திமுக பதவியோ, எம்எல்ஏயோ, அமைச்சரோ கூட இல்லாத குடும்பத்தை குறிவைத்து திமுக கோப்புகளாக (DMK Files) மாறியுள்ளது. இது ரொம்ப பழைய கோப்புகளா? அரசியலில் இல்லாத அண்ணாமலையின் குடும்ப உறவினரை திமுக குறிவைத்தால்.. என்று முன்னாள் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் ட்வீட்.
ஊழல் பட்டியல் வெளியிடுவதாக சொல்லிட்டு சொத்து பட்டியலுக்கு அந்தர் பல்டி அடித்த அண்ணாமலை என்று திமுகவினர் கருத்து.
திமுக மீதான குற்றச்சாட்டுகளை நாளை காலை வெளியிடப் போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோ:
DMK Files
— K.Annamalai (@annamalai_k) April 13, 2023
April 14th, 2023 - 10:15 am pic.twitter.com/4Hlvq4l2G0