VIDEO: அப்பாவை எதிர்ப்போர் சங்கத்தில் இணைந்த சாந்தனு.. வைரல் போஸ்ட்..!!

அப்பாவை எதிர்ப்போர் சங்கத்தில் இணைந்த சாந்தனு.. வைரல் போஸ்ட்..!!
பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள். மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதபட்டு இருக்கிறது.

3 மாதத்திற்கு பிறகுதான் காதும் மூளையும் வளர்ச்சி அடையும். அதற்கு முன் பிறந்தவர்களுக்கு மோடியை பற்றி புரிந்து கொள்ள மூளையும் இல்லை, கேட்டு தெரிந்து கொள்ள காதும் இல்லை.
விமர்சனங்களுக்கெல்லாம் பிரதமர் மோடி செவி சாய்ப்பதில்லை என்று இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Highlighted Comment:
ஒரு பிராமணனுக்கு துரோகம் செய்றது, ஆயிரம் பசுக்களை கொல்வதற்கு சமம் னு சீன் வைக்கும்போதே தெரியும் நீங்கள் சைலண்ட் சங்கி என்று தெரியும் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
Flashback:
ஆனால் இவரது மகன் சந்தனுவும், மருமகள் கிகி விஜய் இருவரும் பாஜகவின் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையால், போன வாரம் எப்படி இளையராஜா மோடியை புகழ்ந்து பேசியதற்கு “கருப்பு திராவிடன், பெருமைக்குரிய தமிழன்” என்று போஸ்ட் போட்டு தன எதிர்ப்பை தெரிவித்தது போல சந்தனுவின் பழைய போட்டோவும் தற்போது இணையத்தில் வைரல்.
அப்பாவை எதிர்ப்போர் சங்கத்தில் முதலில் இணைந்தவர் விஜய். விஜய்க்கும் அவர் தந்தைக்கும் உள்ள பிரச்னை எல்லாம் முடிச்சுபோட்டு சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

#INSTANTகமெண்ட் | "பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்" -இயக்குநர் பாக்யராஜ் பேச்சு குறித்து உங்கள் கருத்து?#SunNews | #Bhagyaraj | #PMModi pic.twitter.com/aPzAxj93bq
— Sun News (@sunnewstamil) April 20, 2022