விடை கொடு எங்கள் நாடே'...தனியாக அழுதுகொண்டே போலந்து எல்லையை அடைந்த சிறுவன்: உக்ரைனின் கோரத்தை காட்டும் காணொளி..!!

Boy Crying Russia Ukraine

விடை கொடு எங்கள் நாடே’…தனியாக அழுதுகொண்டே போலந்து எல்லையை அடைந்த சிறுவன்: உக்ரைனின் கோரத்தை காட்டும் காணொளி..!!

போலந்து: உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு சிறுவன் ஒருவன் ஆதரவு இல்லாமல் தனியாக அழுதவாறே போலந்து நாட்டிற்கு சென்ற வீடியோ உலக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் தொடர்ந்து 14வது நாளாக தாக்குதல் மேற்கொள்வதால், அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் ஸ்லோவாகியா, ஹங்கேரி, போலந்து மற்றும் மால்டோவா போன்ற பக்கத்து நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

மேலும், மக்கள் தங்கள் உடமைகள், உறவினர்களை விட்டு ஆதரவின்றி பக்கத்து நாடுகளை அடைகிறார்கள். இந்நிலையில், உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்களில் ஒரு சிறுவன் யாருமின்றி தனியாக எல்லையை கடந்து போலந்து நாட்டிற்கு சென்றிருக்கிறார்.

அச்சிறுவன் அழுதவாறு தன் உடமைகளை எடுத்துக் கொண்டு போலந்திற்குள் நுழையும் வீடியோ நெஞ்சை பதற வைக்கிறது. அந்த சிறுவன் அழுதுகொண்டே தனது பொருட்களை போலந்திற்குள் இழுத்துச் செல்வதை பார்த்து கண்ணீர் விட்டதாக வீடியோவை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவனுடைய குடும்பத்தினர் எங்கே என்பது குறித்த தகவல் தெரியவில்லை. அந்த சிறுவன் தனியாக தான் உக்ரைனை விட்டு வெளியேறினானா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. எனினும் இந்த பரிதாப வீடியோவை பதிவிட்டவர்கள் சிறுவன் தனியாக தான் பயணம் செய்தான் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts

View all