தனுஷ் தன் குழந்தைகளுக்காக பாடிய பாடல்.. கைதட்டிய இளையராஜா.. விசிலடித்த யாத்ரா, லிங்கா..

தனுஷ் தன் குழந்தைகளுக்காக பாடிய பாடல்.. கைதட்டிய இளையராஜா.. விசிலடித்த யாத்ரா, லிங்கா..
நேற்று சென்னையில் #RockWithRaaja இசை கச்சேரி தீவு திடலில் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ், யுவன், கார்த்திக் ராஜா, தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பல சுவாரிஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றது. இதில் மிகவும் கவனம் ஈர்த்த நிகழ்வுகள் தனுஷ் தன பசங்களுடன் கலந்து கொண்டது தான். யாத்ரா, லிங்கா இருவருமே கலந்து கொண்டனர். மொத கேமராவும் அவர்கள் மேல் தான் இருந்தது.

யுவன், கார்த்திக் ராஜா, தனுஷ் ஆகியோர் “நிலா அது வானத்தின் மேலே” பாட்டை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

மேலும், தன் குழந்தைகளுக்காக தனுஷ் எழுதி, இளையராஜா போட்ட இசையிலேயே ஒரு அழகான தாலாட்டு பாடல் பாடி உருகினார். “சூப்பரா இருக்கு” என்று இளையராஜா அவர்களே கைதட்டி பாராட்டினார்..

வைரல் வீடியோ:
Our @dhanushkraja own lyrics for Yathra and Linga at #RockWithRaja concert.
— Chandru (D Fan ) (@dhanushkutty) March 18, 2022
Whattey soulful lyrics that too fro t of Meastro.
இதுதான் என் குழந்தைக்கு இனிமே தாலாட்டு தலைவா. pic.twitter.com/XSCo5A9lcS