சட்டசபை டல்லடிக்குது சொன்னாங்க வந்துட்டேன் - துரைமுருகன்

சட்டசபை டல்லடிக்குது சொன்னாங்க வந்துட்டேன் - துரைமுருகன்

சட்டசபை டல்லடிக்குது சொன்னாங்க வந்துட்டேன் - துரைமுருகன்

மருத்துவ விடுப்புக்கு பிறகு சட்டசபை வந்த அமைச்சர் துரைமுருகன் ஜாலி டாக் செய்துள்ளது இணையத்தில் வைரல்.

அதாவது,

நீண்ட நாளா நான் சபையில் இல்லை, ரொம்ப டல் அடிக்குதுன்னு எல்லாரும் சொன்னாங்க. நான் வந்த உடனே ஒரு கலாட்டா நடந்துள்ளது என்று ஜாலியாக பேசியுள்ளார்.

மேலும் அதிமுக முல்லை பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அதைப்பற்றி துரைமுருகன் பேசியது:

மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையும் அடக்கம். அணைகளின் நீர் இருப்பு, வெளியேற்றம் உள்ளிட்டவை கூட அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருகின்றன.

அணை பாதுகாப்பு சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வர இன்னும் ஒரு வருடம் ஆகும்.

அனைத்து அணைகளும் பாதுகாப்பு சட்டத்திற்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும். பராமரிக்கும் பொறுப்பை நம்மிடம் அணை பாதுகாப்பு சட்டம் கொடுத்துள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை.

Related Posts

View all