தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.!

இன்று தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கான தேர்வு இன்று முதல் துவங்குகிறது.
அதை முன்னிட்டு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்தது,
இன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 8,37,317 மாணவசெல்வங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

இனிவரும் காலங்களில் அடுத்தடுத்த நிலைக்கு சென்று பலமுன்னேற்றங்களை நீங்கள் அடைவதற்கு அச்சாணியாக இருக்கும் இந்த பொதுத்தேர்வில் நீங்கள் அனைவரும் வெற்றி பெற்று சிறப்புடன் செயல்பட வாழ்த்துகிறேன்.
என்று அவர் கூறியுள்ளார்.
நேற்று முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.