தங்கம் விலை அதிரடி உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்ந்தது...ரூ.40 ஆயிரத்தை கடந்து விற்பனை..!!

சென்னை: உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியாக தங்கம் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.
உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருவதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.5055க்கு விற்பனையாகிறது.
சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ. 40440க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 43368க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 1.80 பைசா உயர்ந்து ரூ.75.20க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.75,200 ஆக உள்ளது.