வீரப்பன் அண்ணன் மாதையன் உயிரிழந்தார். எப்படி?

வீரப்பன் அண்ணன் மாதையன் உயிரிழந்தார். எப்படி?
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வந்த மாதையன், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 1ம் தேதி நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Rewind:
33 ஆண்டுகளாக கோவை சிறையில் ஆயுள் சிறைவாசியாக வாடி வந்தார். இப்போது சேலம் சிறையிலிருந்த போது தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உடல் நலமில்லாமல் இறந்து போனார்.
கடந்த 3.10.2017 அன்று மாதையனை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு பரிசீலிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனாலும் அன்றைய அரசு விடுதலை செய்ய மறுத்துவிட்டது.
சிதம்பரநாதன் எனும் வனக்காவலரை சுட்டுக்கொன்றதாகத்தான் இவர் மீது வழக்கு. இவருடன் சேர்ந்து ஆண்டியப்பன்,பெருமாள் ஆகியோரும் ஆயுள்சிறைவாசிகளாக வாடி வருகின்றனர்.

87 வயதை கடந்து உடல் நலமில்லாமல் விடுதலைக்காகவும் தனது மனைவி மாரியம்மாளை காணவும் ஏங்கிக்கொண்டிருந்தவர் இப்போது உயிரோடு இல்லை.14ஆண்டுகள் ஆயுள் சிறைவாசிகளாக இருப்போரை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் உள்ளன.ஆனாலும் விடுதலை கனவாகவே போனது.
ஆகவே,மாண்புமிகு முதல்வர் கருணை கூர்ந்து 14 ஆண்டுகளை கழித்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.

பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாநில அரசுக்கான அதிகாரத்தை வரையறுத்துள்ளது.
ஆகவே, மீதமுள்ள ஆயுள் சிறை வாசிகளை மனிதநேயத்துடன் விடுதலை செய்ய மாண்புமிகு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு ‘வன்னியரசு’ ட்வீட் செய்துள்ளார்.