இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே பொறுப்பேற்றார்.!

இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே பொறுப்பேற்றார்.!
இந்திய தரைப்படையின் 28ஆவது தலைமை தளபதியாக லெஃப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக பொறியியல் பிரிவைச் சேர்ந்த மனோஜ் பாண்டே என்பவர் ராணுவ தளபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இன்று பொறுப்பேற்ற இவர் 1982ம் ஆண்டு இந்திய தரைப்படையின் பாம்பே சாப்பர்ஸ் படைப்பரிவில் இணைந்து தனது தேச சேவையை துவக்கினார்.

இவர் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு படையில் எத்தியோப்பியா மற்றும் எரித்ரியா ஆகிய நாடுகளில் பணியாற்றி உள்ளார்.
