ஆய்வு செய்ய வந்த இடத்தில் மேயர் ப்ரியா காலில் விழுந்த பணியாளர்கள்.. பரபரபரப்பு வீடியோ..

ஆய்வு செய்ய வந்த இடத்தில் மேயர் ப்ரியா காலில் விழுந்த பணியாளர்கள்.. பரபரபரப்பு வீடியோ..
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சில மண்டலங்களில் 2016ம் ஆண்டு முதல் ஆயுஷ் மருந்தகம் இயங்கி வருகிறது.
இந்த மருந்தகங்கலில் 200க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர். ஆயுஷ் மருந்தகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் தேவையான மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தியுள்ளனர்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி தரமணி பகுதியில் கடந்த 12ம் தேதி மேயர் பிரியா கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
அந்த முகாமிற்கு பிரியா அவர்கள் வருகை தந்த போது ஆயுஷ் பணியாளர்கள் இருவர் பிரியா காலில் விழுந்து மூன்று மாதம் சம்பள பாக்கி இருப்பதாகவும் தொடர்ந்து பணி செய்ய 50000 கேட்பதாகவும் கூறினார்.
மேலும் அவர்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும், தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.