சென்னை முழுவதையும் ஒரு வாரத்தில் கவர் பண்ணிடுவோம் - மேயர் ப்ரியா!

Mayor Priya Interview

குடற்புழு நீக்கம் camp சென்னை முழுவதையும் கவர் பண்ணிடுவோம் - மேயர் ப்ரியா

தேசிய குடற்புழு நீக்க வாரம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

மேலும் சென்னையில் MGR நகரில் உள்ளமாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதில் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்கத்திற்கான மாத்திரைகளை சென்னை மேயர் ப்ரியா ராஜன் அவர்கள் வழங்கினார்.

அதை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் அவர் பேசியது:

Camp முதல் நாளான இன்று ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு மாத்திரைகள் வழங்கப்படுவதாக ப்ரியா தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல், சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 லட்சத்து 55 ஆயிரத்து 354 குழந்தைகளுக்கு ஒரே வாரத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன என்பதையும் உறுதி செய்தார்.

மேலும் 20-30 வயது வரையில் உள்ள பெண்கள் 4 லட்சத்து 12 ஆயிரத்து 480 பேருக்கும் மாத்திரைகள் வழங்கப்பட இருக்கிறது.

முழு வீடியோ:

Related Posts

View all