முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்புகள். முழு விவரம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  வெளியிட்ட அறிவிப்புகள். முழு விவரம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்புகள். முழு விவரம்..!

3000 புதிய காவலர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள். காவல்துறையினருக்கு இறப்பு, விபத்து பாதிப்பு காப்பீட்டுத்தொகை ₹30 லட்சத்தில் இருந்து ₹60 லட்சமாக உயர்த்தப்படும்.

ஆளில்லா விமான அலகு காவல்படை பிரிவு ₹1.20 கோடி மதிப்பில் விரிவு செய்யப்படும்.

சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க “பருந்து” என்ற செயலி ₹33 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவுடன் இணைத்து “போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவாக” சீரமைக்கப்படும்

சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சிக் கல்லூரி, வண்டலூர் அருகே உள்ள உயர் காவல் பயிற்சியக வளாகத்திற்கு மாற்றப்படும்.

Related Posts

View all