தாகத்தில் தவித்த குரங்கிற்கு தண்ணீர் கொடுத்த காவலர்.. குவியும் பாராட்டு. Video Viral..!

கோடைகால வெயிலின் தாக்கம் மனிதர்களை மட்டுமல்லாமல் விலங்குகளையும் ஆட்டி படைத்து வருகிறது.
விலங்குகளும் வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் பரிதவித்து வருகின்றன.

இங்கே தாகத்தால் தவித்த குரங்கிற்கு போக்குவரத்துக்கு காவலர் ஒருவர் கருணை உள்ளதோடு தண்ணீர் வழங்கியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், மல்லேஜ் காட் பகுதியில் சஞ்சய் குடெ என்ற காவலர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபொழுது, அப்போது அந்த வழியே வந்த குரங்கு தாகத்தால் சோர்வடைந்து சுற்றி திரிந்துள்ளது.

அதை பார்த்த போக்குவரத்துக்கு காவலர் தன்னிடம் இருந்த தண்ணீர் பாட்டில் மூலம் குரங்கின் தாகத்தை போக்கினார்.

அந்த காவலருக்கு தற்போது இந்திய முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
சாலையோரம் தாகத்தில் தவித்துக் கொண்டிருந்த குரங்கிற்கு போக்குவரத்து காவலர் தண்ணீர் கொடுக்கும் காட்சி இணையத்தில் வைரல்!#SunNews | #Maharashtra | #Monkey pic.twitter.com/f10peKApTh
— Sun News (@sunnewstamil) April 5, 2022