உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும்.. ரஜினி வாழ்த்து, ஸ்டாலின் நெகிழ்ச்சி ட்வீட்..!

Rajini Stalin Friendship

உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும்.. ரஜினி வாழ்த்து, ஸ்டாலின் நெகிழ்ச்சி ட்வீட்..!

சமீபத்தில் கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்” புத்தகம் நாட்டின் பல தலைவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை துறைமுகம் வெளியிட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பெற்றுக்கொண்டார்.

Rajini Stalin Friendship

அனைவராலும் பெரிதளவு பாராட்டப்பட்ட இந்த புத்தகதில் ஸ்டாலினின் இளமை பருவும், மிசா கைதானது என பல நிகழ்வுகளை அடக்கியது உங்களில் ஒருவன் முதல் பாகம்.

தற்போது ஸ்டாலினுக்கு ஒரு நெகிழ்ச்சி போன் கால் வந்துள்ளது, வேறுயாரும் இல்லை நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் அது. இந்த புத்தகத்தை படித்து விட்டு ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக பாராட்டியுள்ளார்.

Rajini Stalin Friendship

புத்தக விழாவுக்கு வந்த விருந்தினர்கள் எத்தனை பேர் இதை படித்திருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் ரஜினி படித்துவிட்டு வாழ்த்தியிருக்கிறார். இதை முதல்வரே எதிர்பார்த்திருக்கமாட்டார். எதையும் சம்பிரதாயத்துக்கு செய்பவர் அல்ல ரஜினி.

என்று ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்திருப்பது நிதர்சனமான உண்மை. அதுவே ரஜினியின் குணம் கூட.

Rajini Stalin Friendship

அதற்கு ஸ்டாலின் இவ்வாறு ரஜினி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்,

‘உங்களில் ஒருவன்’ படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி!

உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது!

Related Posts

View all